• Jul 24 2025

மனிதர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்- காதலில் விழுந்த நிவேதா பெத்துராஜ் போட்ட திடீர் டுவிட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2016ல் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இதனை அடுத்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவர் ஜெயம் ரவி விஜய்சேதுபதி விஜய் ஆண்டனி எனப் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.இது தவிர தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் வைகுந்தபுறமுலோ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.


இது தவிர நடிகர் அஜித்தைப் போல கார் ரேசிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அது குறித்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ் போட்டுள்ள ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


"Animals >>>>>>>>>>> Human" என தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ள டுவிட்டை பார்த்த ரசிகர்கள் நிவேதா பெத்துராஜுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி திடீரென பதிவிட்டுள்ளார் என்கிற கேள்விகளை கிளப்பி உள்ளது. இவர் தெலுங்கில் தஸ் கி தம்கி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் நாயகன் விஸ்வக் சென் உடன் நிவேதா பெத்துராஜ் காதலில் விழுந்து விட்டதாக எழுந்த கிசுகிசுக்களுக்கு எதிராக இப்படியொரு டுவிட் போட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement