• Jul 24 2025

விருப்பமே இல்லாமல் அந்த படத்தில் நடிச்சேன்- எந்தப் படம் தெரியுமா?- ஓபனாகப் பேசிய ப்ரியங்கா சோப்ரா

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இப்படத்தினைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் படவாய்ப்புக்கள் கிடைக்காத காரணத்தால் பாலிவூட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

பாலிவூட் நடிகர்களின் பல படங்களில் நடித்த இவர் பாலிவுட் படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.தன்னை விட 10 வயது குறைவான நிக்கலஸ் என்பவரைத் திருமணம் செய்திருக்கும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும்  அடிக்கடி வெளியிட்டு வருகின்றார்.


மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு விருப்பம் இல்லாமல் ஒரு படத்தில் நடித்தேன். நான் அந்த படத்தை இப்போது நினைத்தால் கூட அருவருப்பாக இருக்கிறது.


சில சமயங்களில் விருப்பம் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும் என்று கூறியுள்ளார்.இதனால் இவர் விருப்பம் இல்லாமல் நடித்த திரைப்படம் எது என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement