• Jul 25 2025

சினிமாவில் இருந்து விலகப்போகின்றேன்- நடிகை சமந்தா எடுத்த திடீர் முடிவு- என்ன காரணம் தெரியுமா

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. அண்மையில், சகுந்தலம் பட புரோமோஷன்காக சமந்தா அளித்துள்ள பேட்டியில், எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. 

தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்" என்றார்.மேலும் நான் டிஸ்னி படங்களை அதிகமாகப் பார்ப்பேன். முதலில் இப்படத்தில் நடிக்கக் கேட்ட போது நான் ஓகே சொல்லல ரொம்ப பயமா இருந்திச்சு.அதுக்கு பிறகு சரி பண்ணிப் பார்ப்போம் என்று நடிச்சது தான்.


நான் இந்த நோயினால் பாதிக்க முதல் எல்லாமே என்னோட கன்ட்ரோலில் இருக்கணும்.எல்லாம் சரியா நடக்கணும் என்று நினைப்பேன். நோய் வந்தப்போ கூட நான் கரெக்டான சாப்பாடு தான் சாப்பிடுறேன் கரெக்டாத்தான் இருக்கிறேன். ஏன் நோய் வந்திச்சு. ஏன் இன்னும் போகல என்று இருந்திச்சு. ஆனால் அதுக்கு பிறது இப்போ எது நடக்குதோ அது தான் உண்மை எல்லா டைம்லலையும் கரெக்டா இருக்க முடியாது. நிகழ்காலத்தில் நடக்கிறதுக்கு ஏற்றமாதிரி வாழனும் என்று புரிஞ்சுக்கிட்டேன்.


குஷி படத்தை முடிச்சிட்டு சினிமாவில் இருந்து சில காலம் ரெஸ்ட் எடுக்கலாம் . என்னோட உடம்பை சரியா பார்த்துக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்ச மாதம் நடிக்காமல் இருக்கப் போகின்றேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement