• Jul 24 2025

வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்.. பிரபல நடிகையுடன் ஹோட்டலில்.. வெளிவந்த புகைப்படத்தால் சிக்கல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாப் பிரபலங்களான நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தோசமாக நகர்ந்து சென்ற இவர்களது வாழக்கை ஆனது நீண்டநாள் நிலைக்கவில்லை. அந்தவகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து தத்தம் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்ற பற்றி பல வதந்திகளும், காதல் கிசுகிசுக்களும் பரவிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் குறிப்பாக நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின.


இதனை உறுதி செய்யும் விதமாக கடந்தாண்டு இருவரும் லண்டனுக்கு ஜோடியாக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி இவர்கள் இருவரும் லண்டனில் ஜோடியாக சுற்றியதை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.


அதாவது நாக சைதன்யா லண்டனுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு சோபிதா உடன் உணவருந்த சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கிருந்த செஃப் ஒருவர் நாக சைதன்யா உடன் போட்டோ எடுத்து அந்த போட்டோவை  சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோவில் நடிகை சோபிதா பின்னால் அமர்ந்திருப்பதை தற்போது கண்டுபிடித்து அதனை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement

Advertisement