• Jul 24 2025

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு அதனால் அப்பாவும் அண்ணாவும் வீட்டை விட்டு போய்ட்டாங்க- நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டி.ஆர் இயக்கிய உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நளினி.இத்திரைப்படத்திற்கு முன்னர் சில படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

அதன் பிறகு விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நளினி. சினிமாவில் பெரும் நடிகையான நளினி நடிகர் ராமராஜனை திருமணம் செய்துக்கொண்டார். சில நாட்களில் சினிமாவில் வாய்ப்பை இழந்த நளினி பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார்.


இவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் கூட ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகளை பெற வெகுவாக கஷ்டப்பட்டார் நளினி. முக்கியமாக அவரது குடும்பத்தாருக்கே அவர் சினிமாவிற்கு செல்வது பிடிக்கவில்லை.


எனவே நளினி சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே சென்றனர். இருந்தாலும் நளினியின் அம்மா நளினிக்கு மிக ஆதரவாக இருந்தார். என்ன ஆனாலும் நளினியை கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். இந்த விஷயத்தை நளினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement