• Jul 25 2025

"எங்க தாத்தா ஏன்டா தமன்னா கூட டான்ஸ் ஆடப்போறாரு"- ரஜினியை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சித்து வரும் பிரபலங்களில் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவருடைய கிண்டலான பேச்சும் அணிந்திருக்கும் நீல நிற சட்டையும் தான் ஹைலைட் எனலாம்.இவருடைய விமர்சனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் பலர். அதே சமயம் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படத்தை இவர் கலாய்க்கும்பொழுது பல சர்ச்சைகளிலும் சிக்குவார்.

அந்த வகையில், அண்மையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கள் Kaavalaa பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கண்ணாடியை மாட்டி மாஸ் காட்டியிருந்தார் ரஜினிகாந்த். அந்த பாடலில் தமன்னாவுடன் ரஜினி ஆடுவதை கிண்டல் செய்து சிலர் பதிவுகளை போட்ட நிலையில் அது சலசலப்பை ஏற்படுத்தியது.


உங்கள் வீட்டில் யாரையாவது இப்படி வயதை வைத்து கிண்டல் செய்வீர்களா? என்று கேட்க "எங்க தாத்தா ஏன்டா தமன்னா கூட டான்ஸ் ஆடப்போறாரு" என்று கூறி ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பது போன்ற ஒரு மீம் வைரலானது. 


தற்போது அந்த மீம் டெம்ப்லேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார் மாறன். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிடுவது வழக்கம் தான். மேலும் அவர் அந்த பதிவை போட்ட சில நிமிடங்களில் ப்ளூ சட்டை மாறனை கமெண்ட் பெட்டியில் வறுத்தெடுக்க துவங்கினர் ட்விட்டர் வாசிகள்.மாறனும் தன்னால் முடிந்த அளவு வருகின்ற அனைத்து கமெண்ட்களுக்கும் ரிப்ளை செய்து வருகின்றார். பல திரைப்படங்களை விமர்சிக்கும் இளமாறன் என்கிற ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு Anti Indian என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.   



Advertisement

Advertisement