• Jul 25 2025

என்னால இதைத் தாங்க முடியல... மாஸ்டரைத் தொடர்ந்து... கதறி அழும் ரச்சிதா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது என்றுமே இல்லாத அளவிற்கு ரசிகர்கள் பலரது மனங்களையும் கவர்ந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துப் பலரும் காத்திருக்கின்றார்கள். இதற்கான முக்கிய காரணமே பிக்பாஸ் கொடுக்கின்ற வித்தியாசமான டாஸ்க்குகள் தான்.

அந்தவகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக அச்சு அசல் மாறி உள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.


அதில் ரச்சிதாவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். இந்நிலையில் இன்றைய தினம் கண்ணீர் வடித்து ரொபேர்ட் மாஸ்டர் அழுது கொண்டு இருக்கும் போது எல்லோரும் வந்து அவரை சமாதானப்படுத்துகின்றார்கள்.

பதிலுக்கு ரச்சிதா வந்து பேசியும் கேட்காத ரொபேர்ட் மாஸ்டர் "எல்லாரையும் நம்பினேன் எல்லாரும் ஏமாத்திட்டாங்க" எனக் கூறி கண்ணீர் வடித்து அழுகின்றார்.அப்போது பேச வந்த ரச்சிதாவையும் யாரும் என்னிட்ட பேசாதீங்க எனக் கூறியதும் கோபத்தில் அவரும் எழுந்து செல்கின்றார்.


அவ்வாறு எழுந்து சென்ற ரச்சிதா பாத்ரூமில் தனியாக சென்று இருந்து விம்மி விம்மி அழுகின்றார். மைனா வந்து வெளியே வருமாறு கூறி அவரை சமாதானப் படுத்துகின்றார். அதாவது "ரெண்டு பேருமே இப்படி அழுதிட்டு இருக்கீங்களே என்னது நீ ஒரு மெச்சுவேர்ட் ஆன அக்ட்ரேஸ் தானே" என்று கூறி சமாதானப் படுத்துகின்றார்.


ஆனால் பதிலுக்கு ரச்சிதாவோ "நம்பிக்கைத் துரோகம் அது இது என்று அவர் பேசுறதை என்னால தாங்க முடியல, நான் கேம்க்காக தான் விளையாடுறன் அது எனக்குத் தெரியும், அந்த வார்த்தைகளை என்னால ஏற்றுக் கொள்ள முடியல, முதுகிலே குத்துறது இப்பிடி சொல்லுறாரே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" எனக் கூறித் திரும்பவும் அழுகின்றார்.

அதற்கு உடனே மைனா "நான் அவர்கிட்ட பேசிட்டேன், நீ அழாதே, கொஞ்ச நேரத்தில் அவர் சரியாகிடுவார்" என ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறுகின்றார்.

Advertisement

Advertisement