• Jul 26 2025

இப்படியெல்லாம் செய்ய முடியாது-கொந்தளித்த நடிகை சார்மி…நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லிகர் படத்தின் தோல்விக்கு நஷ்டஈடு கொடுக்க நடிகை சாரமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் லிகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.



 மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தே  ஏற்படுத்தி இருநு்துத.ஆனால் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடத்தே மோசமான விமர்சனத்தை சந்தித்ததோடு படுதோல்வியைம் ஏற்படுத்தி இருந்தது.இதனால் பட விநியோகஸ்தர்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர். 

இந்த நஷ்டத்தை சரிக்கட்டும் விதமாக படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் தங்களது சம்பளத்தை திருப்பி தந்துள்ளனர்.



இந்நிலையில் நடிகை சார்மி படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.அத்தோடு இது விநியோகஸ்தர்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த விஷயத்தை தெலுங்கு பட வர்த்தக சபைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடிகை சார்மி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement