• Jul 26 2025

நீயா நானா சூப்பர் அப்பாவிற்கு இப்படியொரு நோயா..? சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒரே ஒரு தொகுப்பாளரை மட்டுமே வைத்து நடக்கும் ஒரு ஹிட் நிகழ்ச்சி  என்றால் அது நீயா நானா தான். இதில் அந்த காலத்திற்கு ஏற்ப நிறைய தலைப்புகள் வைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கும்.

அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூப்பர் அப்பாவின் வாழ்க்கையின் பின்னால் நடந்த விசயங்கள்  ரசிகர்களிடத்தே  வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதனை அவரே ஒரு பேட்டியில் கூற மக்கள் அனைவருமே இவரது வாழ்க்கைளில் இப்படியொரு சோகமா, நிகழ்ச்சியில் அப்படி ஒரு பேச்சுக்கு பின்னால் இந்த காரணங்கள் உள்ளதா என மக்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டனர்

அத்தோடு பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம், சந்தோஷமான வாழ்க்கை என்றாலும் சரியான வேலை இல்லாததால் சுயமரியாதை குறைந்து போனது வருத்தம்.

மனைவியின் தம்பி உதவியோடு முட்டை கடை வியாபாரம் நடத்த அதுவும் சரியாக வராததால் நஸ்டத்தை சந்தித்துள்ளது.இதனால் மனைவியின் தம்பி சரியாக கூட பேசுவது இல்லையாம். உடம்பில் கிட்னி பிரச்சனை இருப்பதால் வாரம் இருமுறை டயாலிசில் செய்து கொண்டிருக்கிறாராம்.

அத்தோடு மாதம் ரூ. 25 ஆயிரம் ஆகிறது, இந்த செலவை மனைவி மற்றும் அப்பா தான் செய்கிறார்களாம். அப்பாவை உட்கார வைத்து சாப்பாடு போடும் நேரத்தில் அவர் தனக்கு உதவுகிறார் என பல விஷயங்கள் நினைத்து வேதனைப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement