• Jul 24 2025

"படுத்த படியே என்னால முடியலடா என்றார்"... வேதனையைப் பகிர்ந்த பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பன்முகக் கலைஞனான நடிகர் மனோபாலாவின் இறப்பு திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பாகும். இவரின் மரணச் செய்தி கேட்டு கண்ணீர் வடிக்காத பிரபலங்கள் மற்றும் ரசிகர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பலரையும் கவலையில் ஆழ்த்தி இருக்கின்றது.


இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருடன் இருந்த தருணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். அந்தவகையில் மனோபாலா அவர்கள் கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார்.


இந்நிலையில் அப்பட இயக்குநரான கதிர் தனது ட்விட்டரில் "படப்பிடிப்பில் படித்தபடியே என்னால முடியலடா, மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா?" என மிகவும் உருக்கமாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement