• Jul 25 2025

என்னால் இங்க ஒருநாள் கூட இருக்க முடியாது.. கேமேரா முன் கண்ணீர் விட்டழுத பவா செல்லத்துரை... வெளியானது வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1-ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், யுகேந்திரன், நடிகை விசித்ரா, பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மாயகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அந்தவகையில் நேற்றைய நாமினேஷனில் அனன்யா வெளியேறியதைத் தொடர்ந்து இன்றைய தினம் நெஞ்சுவலி காரணமாக பவா செல்லத்துரை வெளியேறி உள்ளனர். 


இந்நிலையில் இவர் பிக்பாஸிடம் கண்ணீர் விட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் பவா செல்லத்துரை "இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும் இனிமேல் ஒரு நாள் கூட இங்கு என்னால் இருக்க முடியாது" என்று கூறிக் கண் கலங்குகின்றார்.

அதற்கு பிக்பாஸ் "என்ன காரணம்" என்று கேட்க, பதிலுக்கு பவா செல்லத்துரை "மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுவதாலும் ஒரு சதவீதம் கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது. நெஞ்சு வலிக்கிறது" என்றும் கூறியிருக்கிறார் பவா. 

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எவ்வளவோ அறிவுரை கூறியும் தன்னால் முடியாது எனக்கூறியமையால் பவா செல்லத்துரையை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதோ அந்த வீடியோ..! 


Advertisement

Advertisement