• Jul 23 2025

"உள்ளே அழுகிறேன், வெளியே மட்டும் தான் சிரிக்கிறேன்"... உருகிய சரத்குமார்...? அப்படி இவருக்கு என்ன தான் கஷ்டம்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் குறிப்பாக 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்களைக் கவரும் வகையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அசத்தியிருந்தார். இதனையடுத்து மெகா ஹிட் திரைப்படமான சூரியவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சரத்குமார் பேசுகையில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "வெளியே தான் இப்படி இருக்கிறேன் எனக்குள் நிறைய கஷ்டங்கள் புதைந்துள்ளது" என கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசுகையில் "சூரியவம்சம் பாகம் 2 குறித்து ஆறு மாதமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதை உறுதி செய்தால் படம் தொடங்கப்படும். நூறு வயது வரை கதாநாயகனாக நடிப்பேன். 36 மணி நேரத்திற்கும் மேலாக தூங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் தனது வெற்றிக்கு காரணம்" எனவும் சரத்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் சரத்குமாருக்கு என்ன ஆச்சு? எதனால் தனக்குள் நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறியுள்ளார் எனக் கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement