• Jul 24 2025

தமிழ் படத்தின் காப்பியா? அஜித்துக்கு வாழ்த்து சொல்ல வில்லங்கமாக பதிவிட்ட நடிகர்..தீயாய் பரவும் பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 4ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஆரி அர்ஜுனன். அவருக்கு அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. 

அதனால் அவர் அந்த நிகழ்ச்சி  முடித்து வெளியில் வந்தால் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து ஜெயிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது எல்லாம் தலைகீழாக இருந்தது.

ஆரி எப்போது படம் நடிப்பீங்க என கேட்கும் அளவுக்கு அவர் கைவசம் எந்த படமும் இல்லை.இவ்வாறுஇருக்கையில்  தற்போது அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார்.  

மேலும் ஒரு ரசிகர் கமெண்டில் புஷ்பா படம் உங்கள் நெடுஞ்சாலை பட காப்பி என போட்டிருக்கும் ஒரு பதிவை screenshot எடுத்து ஆரி பதிவிட்டு உள்ளார்.

"திறமையுள்ளவர்கள் வாய்ப்பைத் தேடி அலையும் காலம் இது.. திறமையுள்ளவர்களைத் தேடி வாய்ப்பு வரும் காலம் விரைவில்!!! #HBDAjith sir விடாமுயற்சியுடன் உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்" எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

தன்னை தேடி எநத பட வாய்ப்பும் வரவில்லை என்று தான் அவர் மறைமுகமாக தெரிவித்து உள்ளார்.



Advertisement

Advertisement