• Jul 25 2025

நாங்க ‘லவ்’ பண்ணலனு சொல்லவே இல்ல…மனம் திறந்த விஜே ஜாக்குலின்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ஜாக்குலின். இவரும் தொகுப்பாளர் ரக்‌ஷன் ,இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்றே சொல்லலாம் . 

இருவரும் ஒரே தொலைக்காட்சியில் வேலை செய்வபர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்கள். எனவே இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வது புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று.  இதனால் சில வதந்தி தகவலும் அடிக்கடி பரவுவது உண்டு. அந்த வகையில், இருவரும் காதல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், இது குறித்து இதுவரை பேசாமல் இருந்த ஜாக்குலின் சமீபத்திய பேச்சு ஒன்றில் மனம் திறந்து பதில் அளித்து வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.இது குறித்து பேசிய ஜாக்குலின் ” நங்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது, நாங்கள் இருவரும் லவ் பண்ணவே இல்லை என்று நான் இதுவரை எந்த இடத்திலும் சொன்னது இல்லை.

அதற்கான காரணம் என்னவென்றால், தேவையற்ற வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ரக்ஷன் எனக்கு சினிமா துறையில் இருக்கும் மிகவும் நெருங்கிய நல்ல நண்பர். அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்பது எனக்கு முன்பே தெரியும். அவருடைய மனைவி என்னிடம் நன்றாக பேசுவார்” என தெரிவித்தார்.


Advertisement

Advertisement