• Jul 23 2025

யோகாசனம் செய்வதால் தான் இந்த பிரச்சினை எனக்கில்லை- உண்மையை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ்குமாரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரஜனி விஷால் சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.

இது தவிர சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.1.4 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.


தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். 

கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசனம் செய்யும் வீடியோவை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். "தினமும் யோகாசனம் செய்யும் போது டென்சன் குறையும்" என்று கீர்த்தி சுரேஷ் இந்த யோகாசன வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement