• Jul 25 2025

எனக்கு இந்த விளையாட்டே வேணாம் என்னை அனுப்பிவிடுங்க- பிக்பாஸ் வீட்டில் ஜனனி எடுத்த தீடீர் முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். பொம்மை டாஸ்க், ஸ்வீட் பேக்கரி டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு கடந்த வாரம் வீடே கலவரமானது.இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறி உள்ளது.

இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள்.இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமன் சேவகராக இருக்கும் ஷிவின் செய்யும் தவறுகளைப் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி  அவருக்கே சர்ப்போட் பண்ணி வருகின்றார்.

இந்த நிலையில் இளவரசியாக இருக்கும் ஜனனியிடம் நீங்க பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளரே தவிர உண்மையான இளவரசி கிடையாது எனத் திட்டியுள்ளார்.இதனால் கடுப்பான ஜனனி இளவரசி பதவி எனக்கு வேண்டாம். நான் இதில இருந்து விலகின்றேன். விக்ரமன் தான் சொல்வது தான் சரி என்பது போல செயற்படுகின்றார். இவரின் இந்த செயற்பாடு எனக்கு பிடிக்கவில்லை. நான் இதில இருந்து விலகுகின்றேன் பிக்பாஸ் என காமெரா முன்னாடி வந்து பேசுகின்றார்.இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement