• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் ரொமான்ஸ் பண்ணும் ராபர்ட் மற்றும் ரச்சிதா-வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 38நாட்களை கடந்த நிலையில் தற்போது 16போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளார்கள். எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றார்கள்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ரஜனியின் முத்து பட பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement