• Jul 24 2025

தாய் வீட்டிற்கு மகள் வருவது போல் உணருகிறேன்.. திருமணத்திற்குப் பின் குட்நியூஸ் சொன்ன ஹன்ஷிகா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்ஷிகா. தன்னுடைய அழகினாலும், நடிப்புத் திறமையினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது 'சின்னக் குஷ்பூ' எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.


இவ்வாறாக சினிமாவில் படு பிசியாக இருந்து வந்த ஹன்சிகாவுக்கும், தொழில் அதிபரான சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு ஹன்ஷிகா சில நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். 


இந்நிலையில் தற்போது திருமணத்துக்கு முன்பு ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க ஹன்சிகா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்காக சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். 


இவ்வாறு விமான நிலையத்திற்கு வந்த ஹன்சிகாவை ரசிகர், ரசிகைகள் மாலை அணிவித்தும், ரோஜாப் பூ கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அங்கு வந்த நிருபர்களிடம் ஹன்சிகா கூறும்போது, "நான் மீண்டும் நடிக்க வந்தது, தாய் வீட்டுக்கு மகள் வரும்போது எப்படி இருக்குமோ? அதுபோல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "இந்த ஆண்டு எனது நடிப்பில் 7 படங்கள் வரப்போகிறது. இந்த ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமாக உள்ளது. சென்னையில் ஒரு மாதம் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன். கல்யாண வாழ்க்கை மிகவும் நல்லா இருக்கிறது. திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறேன்" எனவும் மகிழ்ச்சி கலந்த தொனியில் கூறியுள்ளார் ஹன்ஷிகா.

Advertisement

Advertisement