• Jul 25 2025

எனக்கு வேண்டாதவங்க தான் இதை பண்றாங்க…கடுப்பான மன்சூர் அலிகான்...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.மேலும் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்திருந்தது.


இதற்கிடையில், நடிகர் மன்சூர் அலிகான் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு சில நபர்கள் ‘தளபதி 67’ படம் தொடர்பான புகைப்படங்களும், அப்டேட்டுகளும் பகிர்ந்து வருகிறார்கள்.  அத்தோடு சற்று கடுப்பான மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எந்த ட்வீட்டர் கணக்குகளில் இல்லை என கூறியுள்ளார்.


மேலும் இது குறித்து பேசிய மன்சூர் அலிகான் ” எனக்கு எந்த ட்வீட்டர் கணக்கும் இல்லை. எனக்கு வங்கியில் மட்டுமே கணக்கு இருக்கிறது. மற்றபடி, எந்த ட்வீட்டர் கணக்கும் இல்லை. தளபதி 67 படத்தினுடைய டேக்கை போட்டு என்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இது எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.

எனக்கு ட்விட்டர் பற்றியெல்லாம் பேச தெரியாது. நான் இப்போது என்னுடைய ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.அத்தோடு  இந்த மாதிரி பொய்யான கணக்குகளை உருவாக்குபவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி செய்தால் அவர்களுக்கு சந்தோசம் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement