• Jul 25 2025

காதல் நம்பிக்கை துரோகத்தை நானும் சந்தித்திருக்கிறேன்..பிரியா பவானி சங்கர் ஒபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு செய்தி வாசிப்பாளராக மீடியாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அவருடைய எதார்த்தமான முகபாவனைகள் மற்றும் வசீகரமான அழகு போன்றவற்றால் சின்னத்திரையில் அறிமுகமானார். 

விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் முதன் முதலில் கதாநாயகியாக நடித்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் இவருக்காகவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் பிரியா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றார். வெள்ளித்திரையில் மேயாத மான் என்னும் திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு பிரியா பவானி சங்கர் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் கிரஷ் ஆக மாறினார் என்று கூட சொல்லலாம். 

அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.பொதுவாக நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகைகள் தங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அந்த அளவுக்கு வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால் பிரியா பவானி சங்கர் நன்றாக சினிமாவில் வளர்ந்து கொண்டு வரும்போது தன்னுடைய நீண்ட வருட காதலன் என்று ராஜவேலன் என்பவரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிரியா பவானி சங்கர் மற்றும் ராஜ வேலன் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலிப்பதாக கூட அவர் சொல்லி இருந்தார். இதற்கு இடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் நான் தப்பான ஒருவரை நம்பி ஏமாந்து இருக்கிறேன், அவர் தப்பானவர் என்று பல பேர் சொல்லியும் அதீத அன்பால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும், ஒரு கட்டத்தில் அவர் தப்பானவர் தான் என்று தெரிந்தும், அவர் மீது கொண்டிருந்த அன்பால் என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி ஏமாந்து இருக்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார் பிரியா. இவர் இப்படி குறிப்பிட்டு இருப்பது அவருடைய காதலன் ராஜவேலனை தானா என்று சரியாக தெரியவில்லை.

மேலும் பிரியா பவானி சங்கர் தான் காதலில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக சொல்லி இருந்தும், அவர் கூட நடித்த எஸ் ஜே சூர்யா மற்றும் கவின் போன்றவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார். 

இதனால் பிரியா பவானி சங்கர் யார் செய்த நம்பிக்கை துரோகத்தை பற்றி பேசுகிறார் என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement