• Jul 24 2025

விக்னேஷ் ஷிவன் செய்த அதே பாணியில்.. 'லால் சலாம்' படத்திலிருந்து விலகியதை சூசகமாக சொன்ன விஷ்ணு விஷால்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது 'லால் சலாம்' என்ற படம் உருவாகி வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.


இவர்களோடு இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு பணிகள் யாவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் வெளியேறப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இதனையடுத்து தற்போது திடீரென விஷ்ணு விஷால் போட்டுள்ள ட்வீட் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்பதையே உறுதிப்படுத்தி நிற்கின்றது. 

அதாவது அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்படுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், விக்னேஷ் சிவனே அது தொடர்பான சிக்னலை சோஷியல் மீடியாவில் கொடுத்திருந்தார்.


இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷாலும் அப்படியொரு சிக்னலை கொடுத்துள்ளார் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "You got to stand for your own self.. No one will....." என்கிற கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக அவர் 'லால் சலாம்' படத்திலிருந்து வெளியேறி விட்டார் என்பது உறுதியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement