• Jul 25 2025

கமல்ஹாசனை நான் சைட் அடிச்சிருக்கன்...மனம் திறந்த நடிகர் மைம் கோபி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். சிறுவயதில் இருந்தே நடித்து வருபவர். தற்போது உலகநாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இவர் தனது அதிரடியை நிரூபித்து வருகிறார். அடுத்தடுத்து ஹெச் வினோத், மணிரத்னம் படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசனுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் மைம் கோபி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் குறித்த தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இரண்டு பக்க டயலாக்கையெல்லாம் ஒரே டேக்கில் ஓகே செய்யும் ஆளுமையாக நடிகர் கமல்ஹாசன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின்போது தான் கமல் சாராக பார்த்ததாகவும் ஆனால் 200 பேரை கொண்ட செட்டிற்குள் அவர் வந்தவுடன் அந்த இடமே மிகவும் சைலண்டாக மாறிவிட்டதாகவும் மைம் கோபி தெரிவித்துள்ளார். அந்த டயலாக்கில் எந்த இடத்தில் இடைவெளி விட வேண்டும் என்பது உள்ளிட்ட துல்லியங்களையும் அவர் சிறப்பாக கையாண்டதாகவும், அவரது ஒவ்வொரு அங்கமும் நடித்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரை சைட் அடிப்பதற்காகவே தான் அங்கேயே உட்கார்ந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement