• Jul 25 2025

நான் சூப்பர் ஸ்டாரை பார்த்து தான் இதை கற்றுக் கொண்டேன் அது என்னை உணரவச்சிருக்கு- போல்ட்டாக பேசிய விஜே அர்ச்சனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் மம் நிகழ்ச்சியினை தனது மகளுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் 'டாக்டர்' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். 

 தற்போது ஆர்ஜேவாகவும் அவதாரம் எடுத்துள்ள இவர் பிரத்தியேகமான பேட்டி ஒன்றை அண்மையில் அளித்திருந்தார்.அதில்  தனது ஆர்ஜே கனவு குறித்து பேசிய அவர் ரேடியோ மிர்ச்சியில் பணியாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்றும் 'அச்சும்மா' என்ற பெயரை சொல்லியே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார். 


அத்தோடு நிறைய ரசிகர்கள் தன்னுடன் பேசும் போது டாபிக் மொத்தத்தையும் கேட்டுவிட்டு உங்க குரலை கேட்கத்தான் கால் பண்ணேன் என சொல்லி போனை வைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜே, யூடியூப் சேனல், தற்போது ஆர்ஜே என கலக்கி வரும் அர்ச்சனாவிற்கு நேரமெல்லாம் எப்படி பத்துக்கிறது என கேட்கப்பட்ட போது, எல்லாரையும் போல எட்டு மணிநேரம் நல்லாவே தூங்குறேன்.மத்தபடி மீதி பதினாறு மணிநேரத்துல தான் இந்த வேலையெல்லாம். இன்னும் சொல்லப்போன வேற வேலை இருந்தாலும் சொல்லுங்க.

 நிறைய டைம் எனக்கு மிச்சம் இருக்கும் என்றும் சொல்லி அசத்தியுள்ளார். மேலும் ரஜினியின் தீவிர ரசிகையான அர்ச்சனா, 'பாபா' ரீ ரிலீஸ் குறித்து பேசும் போது, சூப்பர் ஸ்டாரை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிறகு தான் ஆன்மீகத்தில் தனது அதிக ஈடுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


அத்துடன் உருவமில்லாத கடவுள் நம்மை சூழ்ந்து இருப்பதையும் உணர வைத்தது பாபா படம் என்றும் கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி படங்களின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய அர்ச்சனா, சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பெஞ்ச் மார்க். எந்த ஹீரோவை கேட்டாலும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்கணும் தான் சொல்லுவாங்க. அப்படி ஒரு இடத்தை கிரியேட் பண்ணி இருக்கார் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement