• Jul 26 2025

என் மனைவி டாக்டர் 5 வருடம் காத்திருந்து திருமணம் செய்தேன்- குக்வித் கோமாளி மைன் கோபி சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 4.  இந்த ஷோவில் புது கோமாளிகள் வந்திருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸியமாகச் சென்று கொண்டிருக்கின்றது.

இதில் குக்காக முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் மைம் கோபி. இவர் பல தமிழ் படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து மிரட்டியவர் பல ஹாரர் படங்களையும் அவரை பார்த்திருக்கலாம்.


இவர் குக்வித் கோமாளி ஷோவில் அவ்வப்போது தனது மைம் நடிப்பு திறமையையும் செய்து காட்டி பாராட்டை பெற்று வருகிறார்.தற்போது அவரது மனைவி ஒரு டாக்டர் என கூறி இருக்கிறார். "அவர் ஒரு டாக்டர். MD Community medicine படித்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் படித்தவர். ஆனால் நான் NGO பணிகள் அதிகம் செய்வேன். அதை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி என்னை காதலித்தார்."

"எங்கள் காதலுக்கு அவர் வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எதிர்த்து திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அதனால் 5 வருடம் காத்திருந்து தான் திருமணம் செய்து கொண்டோம்" என மைம் கோபி கூறி இருக்கிறார். இவர் இவ்வாறு கூறியது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம். 

Advertisement

Advertisement