• Jul 25 2025

ராஜா ராணி சீரியலை விட்டு விலக இது மட்டும் தான் காரணம்- உண்மையை சூசகமாக சொன்ன ரியா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமானது ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் அடுத்தடுத்து வெளியேறுவதால் ரி ஆர் பி யிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அந்த வகையில் அண்மையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சந்தியா ரோலில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகை ஆஷா கௌடா தான் தற்போது சந்தியாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.


இந்த சீரியலில் ஹீரோயின் மாற்றப்படுவது இது மூன்றாவது முறை என்பதால் தற்போது ரசிகர்கள் புது நடிகையை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகலாம் என தெரிகிறது.

இந்நிலையில் ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். தான் வெளியேறியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என சூசகமாக கூறி இருக்கிறார்.


மேலும் மற்றொரு பதிவில் காரணம் அவருக்கே தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதனால் காரணம் சொல்லாமல் நீக்கிவிட்டார்களா? என கேள்வி எழுந்திருக்கிறது.அதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை நடந்திருக்கலாம் என தெரியவந்திருக்கிறது.


மேலும் 'திருமணம் fix ஆனதால் தான் ராஜா ராணியில் இருந்து விலகினேன் என வந்த செய்தி முற்றிலும் பொய்யானது' என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement