• Jul 26 2025

என்னோட துணையை ரொம்ப மிஸ் பண்றேன்-சோகமான டுவிட் போட்ட விக்னேஷ் சிவன்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை 9 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தோடு வாடகைத் தாய் முறையில் அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்று எடுத்தனர். மேலும் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார்


இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.இச்சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல மான்சூன் சாட் கார்னர் உணவகத்தில் இருந்து பானி பூரி தயார் செய்யும் வீடியோவை பகிர்ந்து, "நான் என் துணையை மிஸ் பண்றேன்" என பதிவிட்டுள்ளார்.


இவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement