• Jul 23 2025

பிரபல நடிகரிடம் வாழ்த்து பெற்று தான் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன் - உதயநிதி ஸ்டாலின்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக களமிறங்கினார்.

பின் சினிமாவில் ரெட் ஜெயண்ட் என்ற நிறுவனம் மூலம் நிறைய படங்களை விநியோகம் செய்துவந்த உதயநிதி சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

நடிகராக களமிறங்கியது முதல் அவருக்கு மக்களிடம் நல்ல ரீச். ஆரம்பத்தில் ஜாலியான படங்களை நடித்து வந்த உதயநிதி பின் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.எனினும் இதை தொடர்ந்து வருகிற 18ஆம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் திரைக்கு வருகிறது. 

மேலும் இப்படத்தின் ப்ரோமொஷன் பேட்டியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் உதயநிதியிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு குருவி படத்திலிருந்து விஜயுடனான உறவை பற்றி பேசி வந்த உதயநிதி ' தேர்தல் பிரச்சாரத்திற்கு முன், விஜய் என்னை அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களை பெற்ற பின் தான், பிரச்சாரத்திற்கு சென்றேன் ' என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement