• Jul 24 2025

யோவ் இப்படி முட்டிட்டு சுத்துங்க - நள்ளிரவில் விக்ரமனுடன் டூயட் பாடும் மைனா நந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியிலிருந்து 4 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்பொழுது 17 பேர் மட்டுமே கடுமையாக விளையாடி வருகின்றனர்.

மேலும் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.இதில் அட தேனடை மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிய பெயரில் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.இதில் தினசரி போட்டியாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு வந்தது.


குறிப்பாக விக்ரமன் -அமுதவாணன்  மணிகண்டன்- தனலக்ஷ்மி ஆகியோருக்கிடையிலான மோதல் ரசிகர்களுக்கு பெரிதும் எரிச்சல் மூட்டியிருந்தது. இருப்பினும் டாஸ்க் முடிந்தவுடன் போட்டியாளர்கள் ஒன்றாக இருந்து சகஜமாக பேசி வருகின்றனர்.


அந்த வகையில் தாம் சேர்த்து வைத்த பணத்தினை சேர்த்து வைப்பதற்காக மைனாவும் விக்ரமனும் நித்திரை முழித்திருந்ததோடு தனுஷின் பறக்க பறக்க துடிக்குதே பாடலுக்கு நடனமாடியுள்ளனர். நடனம் ஆடத் தெரியாத விக்ரமனுக்கு மைனா அழகாக நடனம் சொல்லிக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement