• Jul 25 2025

எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்துட்டேன்- கேப்டன் பாணியில் அசீமை தூக்கியடித்த ஏடிகே- 67ம் நாளில் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். தற்போது 10வது வாரத்தின் இறுதி பகுதியில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து யார் எவிக்சன் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதனிடையே இந்த வாரம் நடைபெறும் சொர்க்கவாசிகள் - நரகவாசிகள் என்ற டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பம் முதலே இரண்டு குழுவாக பிரிந்து விளையாடும் போட்டியாளர்கள் அடிக்கடி வார்த்தை மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 67ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.அதாவது வீட்டில் யார் மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு வருவார்கள் என்ற டாஸ்க்குடன் தான் முதல் நாள் முடிவடைந்தது. அந்த டாஸ்க்குடன் மீண்டும் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து சொர்க்கவாசிகள் - நரகவாசிகள் என்ற டாஸ்க் ஆரம்பமாகியது.


அதல் ஏஞ்லாக இருக்கும் கதிரை நரகத்தில் இருக்கும் ஷிவின் பாதுகாத்துக் கொண்டிருந்தார். இதனால் அசீம் ஷிவினை கலாய்க்க இவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் ஜனனி ஆகியோரும் ஷிவினை குற்றம் சாட்டியிருந்தார்கள். தொடர்ந்து ஜனனிக்கும் ஷிவினுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஜனனி தான் சொர்க்க வாசலின் ஊடாக போகாமல் அமுதவாணனை அனுப்பியிருந்தார். இதனால் கடுப்பான ஷிவின் மற்றும் தனலக்ஷ்மி ஆகியோர் ஜனனிக்கு சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கின்றனர். தொடர்ந்து  பேசிக்கொண்டிருக்கும் தனலக்ஷ்மி கேம் நல்லா போயிட்டு இருக்கு. அசீம் இன்னும் விளையாட ஆரம்பிக்கல அவர் விளையாட ஆரம்பிச்சா எல்லோரும் மெடிக்கல் ரூமுக்குள்ள போகணும் போல என்று கூறுகின்றார்.


இதனைக் கேட்ட அசீம் தனலக்ஷ்மியை கலாய்க்கின்றார். இதன் பின்னர் அதில், சொர்க்கத்தில் இருக்கும் ஏடிகேவை நரகத்திற்கு அழைக்கலாம் என அசீமும், ஷிவினும் முடிவு செய்கின்றனர். இதனால் ஏடிகேவுக்கு எமோஷனல் ஸ்டெபிலிட்டி இல்லை என அசீமும் ஷிவினும் கூற, அதனை ஏற்ற்க்கொள்ளாத ஏடிகே, அசீமுடன் சண்டையிடுகிறார்.


அப்போது ஏடிகே சொன்னதை கேட்டு அசீம் சிரித்ததால், கடுப்பான ஏடிகே, "சிரித்தால் அசிங்கமா கேள்வி கேட்பேன்" என சீறினார். இதனால் கடுப்பான அசீம்"நீ எப்படி என்னை அசீங்கமா கேப்பன்னு சொல்லுவ" என ஏடிகேவிடம் எகிறுகிறார். தொடர்ந்து விக்ரமனிடம் ஏடிகே எமோஷனலாக பேசுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement