• Jul 25 2025

இயக்குநர் தாய் செல்வத்தின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்- தேம்பித் தேம்பி அழுத நடிகர் செந்தில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3-ம் விதி’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் தாய் செல்வம். 


இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான, காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், பொன்னூஞ்சல், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2  உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர்.


இவர் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தாய் செல்வம் உடலுக்கு நடிகர்கள் செந்தில், பவித்ரா, ரேகா நாயர், ஷமிதா உள்ளிட்டோர் மாலை சாற்றி அஞ்சலி செலுத்தினர்.மேலும் செந்தில், பவித்ரா, ரேகா நாயர், ஷமிதா ஆகியோர் துக்கம் தாளாமல் கதறி அழுத காட்சிகளும், அழுகையை நிறுத்த முடியாமல் தேம்பி தேம்பி இவர்கள் அழுதது  காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Advertisement

Advertisement