• Jul 26 2025

என்னோட புகழைக் கெடுக்கின்றார் 10 கோடி தரணும்- பிரபல தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுக்கும் நான் ஈ பட வில்லன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நான் ஈ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான்  நடிகர் தான் கிச்சா சுதீப், இவர் கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராகவும் வலம் வருகின்றார். நான் ஈ,விஜய்யின் புலி மற்றும் முடிஞ்சா இவன பிடி உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். 

அதே போல கன்னடம் மற்றும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். தற்பொழுது இவருடைய நடிப்பில் Kabzaa 2 என்ற திரைப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இவர் இயக்குநராகவும் பல திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளராகவும் இதுவரை 7 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார் .


புகழின் உச்சியில் உள்ள சுதீப் மீது அண்மையில் ஒரு பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டது. கன்னடா திரை உலகில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளர் எம.என் குமார் என்பவர் சுதீப் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு தற்பொழுது நடிக்க மறுக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு அந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். 


இந்நிலையில் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்று கூறி தயாரிப்பாளர்கள் எம்.என் குமார் மீது பதில் வழக்கு தொடுத்துள்ளார் சுதீப். மேலும் தனக்கு நஷ்ட ஈடாக அவர்கள் 10 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement