• Jul 23 2025

கவின் பற்றி தப்பாக கூறி விட்டேன்.. ஆனால் அவர்..? திடீர்ப் பதிவை வெளியிட்ட அபர்ணா தாஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3இன் உடைய முக்கியமான போட்டியாளர்களில் ஒருவரான கவின் தற்போது ஹீரோவாக 'டாடா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் பிக்பாஸுக்கு பிறகு கவின் நடிப்பில் வந்த 'லிப்ட்' என்ற படமானது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனாலும் அந்தப் படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 


இதனைத் தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக நடித்து இருக்கும் டாடா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


அதுமட்டுமல்லாது ப்ரீமியர் ஷோ படத்தை பார்த்த பல விமர்சகர்களும் படத்தை வெகுவாகப் பாராட்டித் தள்ளி உள்ளனர். மேலும் இத்திரைப்படம் ரொம்பவே ஃபிரெஷ்ஷா இருக்கு எனவும் பல பாராட்டுக்கள் குவிந்துள்ளது.


இந்நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கும் அபர்ணா தாஸ் கவின் பற்றி தற்போது பெரிய பதிவு ஒன்றினைப் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறுகையில் "நான் அளித்த பேட்டிகளில் கவின் ரொம்ப கோபக்காரர் என பலவாறு கூறி இருந்தேன். அது தப்பு என்று தற்போது உணருகின்றேன். அவர் சரியான விஷயங்களுக்காக தான் அப்படி கோபத்துடன் இருக்கிறார்"  எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் "கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எனக்கு அவரை தெரியும். நீங்கள் இல்லை என்றால் இந்த படமே வந்திருக்காது" எனவும் அபர்ணா தாஸ் கவினைப் புகழ்ந்து கூறி இருக்கிறார். இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement