• Jul 24 2025

என்னை சீரழிச்சு ஒன்றரை வாரம் கதற கதற அழ வைச்சாங்க.. அசீம் முன் புலம்பிய அசல்.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இதன் 6ஆவது சீசனானது சமீபத்தில் தான் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் உடைய டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி இருந்தார். அதே சமயத்தில் இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்களைக் கடந்து விட்ட நிலையிலும் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பேச்சு பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகின்றது. அந்தவகையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் அசீம் கலந்து  கொண்டிருக்கின்றார். அப்போது அவருடன் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


அந்த நிகழ்ச்சியில் அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அசல் கோலார் வடசென்னையில் இருந்து வருவது குறித்த விமர்சனம் பற்றி பேசிய அசீம், "வடசென்னைல இருந்து வர்றவங்க ஸ்லாங் தப்பா தான் இருக்கும், அவங்க மொழி அவதூறா இருக்கும்னு சிலர் சொல்லுவாங்க. சென்னையோட பூர்வக்குடியே வட சென்னை தாங்க. 

நான் பிறந்தது நாகர்கோவில்ல இருக்கிறது ஆளுர்ன்னு ஒரு பகுதியில. அதுக்கப்புறம் சென்னை வந்துட்டோம். ஆனா, சென்னையோட உண்மையான அசல் இந்த அசல் இருக்கிற வடசென்னை தான். அது தெரியாம பலபேர் இந்த ஏரியால இருந்து வர்றவங்க தப்பா இருப்பாங்கன்னு சொல்றது" எனக் குறிப்பிட்டு வடசென்னையில் உள்ளவர்கள் பேசுவது போன்று ஸ்லாங் குறித்தும் சில வசனங்கள் பேசி தனது விளக்கத்தை கொடுத்திருந்தார் அசீம். 


மேலும் தொடர்ந்து பேசுகையில் "பிக்பாஸ்ல இருக்கும் போது சொன்னேன், என் தம்பி (அசல்) எங்க இருந்து வர்றாங்குறது முக்கியமில்ல. இப்ப பிக்பாஸ்ல எப்படி இருக்கான்ங்குறது தான் முக்கியம்ன்னு. இப்ப வந்துட்டான். அவன் ஜோர்த்தால பாட்டுல உங்களுக்கு தெரியும், தமிழ் படங்களில் சில பாட்டுகள் எழுதி இருக்கான்னு தெரியும். அத தாண்டி உங்களுக்கு தெரியாது. கூடிய விரைவில் அசல் தனக்கான அசல் அங்கீகாரத்தை கொடுக்கணும், அவன் எடுப்பான், தமிழ் சினிமா அவனக்கு வழங்கும்ங்குறத இந்த இடத்துல நான் பதிவு செய்து கொள்கிறேன்" எனவும் அசல் கோலார் பற்றி அசீம் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து அசல் கோலார் வீட்டுக்குள் இருந்த விதம் வெளியே தப்பாக Convey ஆனது பற்றியும் அதை வெளியே வந்து பார்த்தபோது மனநிலை எப்படி இருந்தது என்பதை பற்றியும் அவரிடமே அசீம் கேள்வியினைக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அசல் கோலார், "மனுசனா எல்லாருக்கும் வலிக்கும்ல அந்த மாதிரி தான். இப்ப நம்ம அதை பண்ணியிருந்தால் ஓகே நம்ம தானே பண்ணோம்ன்னு எடுத்திருக்கலாம்.

ஆனா, நம்ம Intention -ஆ பண்ணாத ஒரு விஷயத்தை, உண்மை மாதிரி கட்டமைக்கப்பட்டு, அது வேற மாதிரி புனரமைக்கப்பட்டு, சித்தரிக்கப்பட்டு, என்னை சீரழிச்சு, என்னை வீட்ல ஒரு ஒண்ணரை வாரம் உட்கார வச்சி, என்னை கதறி கதறி அழ வெச்சு, இந்த மாதிரி எல்லாம் பண்ணாங்க. ஒரு ஒண்ணரை வாரம் தான் இதுக்கு எல்லாம் மரியாதை. அதுக்கப்புறம் ஸ்டூடியோ போயிட்டு திருப்பி என்னோட வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டேன்" என அசல் கோலார் ஓப்பனாக கூறினார்.


அதுமட்டுமல்லாது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் சென்ற போது அவர் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் யாவும் மாறியதாகவும் அசல் கோலார் அந்த நிகழ்வில் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement

Advertisement