• Jul 24 2025

சின்னத்தம்பி பார்க்க கேர்ள் ஃப்ரண்டோட போனேன்”- வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு குறித்து கூறிய விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது.இப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படத்தின்  இசை வெளியூட்டு விழா கடந்த 24ம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


 இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்,  “குஷ்பூ மேடத்தை பார்த்தால் எனக்கு ஒன்று நினைவுக்கு வருது. அப்போது கமலா தியேட்டரில் சின்ன தம்பி படத்தை கேர்ள் பிரண்ட் உடன் சென்று பார்த்த ஞாபகம்தான் வருது.” என கூறினார். இதை சொன்னபோது அரங்கத்தினர் ஆரவாரத்தில் கைத்தட்டினார்கள்.


அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே ரம்யா, “Sir sir sir அந்த girlfriend பேர் என்ன சார்?” என கேட்க, விஜய்யும் விளையாட்டாக, “நீ கொஞ்சம் வெளிய இருமா போ மா..” என கூறி சமாளித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement