• Jul 25 2025

பல ஆண்டுகள் கழித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 


 குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை இந்த சீரியலின் கதை உருவாகி ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. 


இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சுசித்ரா.இவர் கன்னட நடிகை ஆவார். இந்த நிலையில் சென்னையில் புது வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி கிரஹப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


 மீடியாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் பல ஆண்டுகள் கழித்து வீடு வாங்கி இருக்கும் சுசித்ராவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement