• Jul 25 2025

நான் 35 வயசில் தான் அதை கண்டிப்பாக பண்ணுவேன்- விக்ரமனிடம் உணர்ச்சி பொங்க பேசிய ரச்சிதா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது 10 வாரத்தினை எட்டியுள்ளது. கடந்த வாரம் நடந்த கதாபாத்திர டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன், மைனா, ரச்சித்தா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் மைனா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில்  ஜனனி, ஏடிகே, அசிம், விக்ரமன், மணி மற்றும் ரச்சிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.தற்போது இந்த வாரத்திற்கான சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். 


கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நரகத்தில் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்காக பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சொர்க்கத்தில் இருக்கும் ரச்சிதா விக்ரமனிடம் தனது தனிப்பட்ட விடயங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது தனது 35வது வயதில் கண்டிப்பாக நான் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பேன். அதுவே என்னுடைய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு விக்ரமன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement