• Jul 25 2025

நீங்க நினைக்கிறது எப்பவுமே நடக்காது- ஷிவினிடம் ஆவேசமாகப் பேசிய விக்ரமன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 11 போட்டியாளர்களே உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பித்த முதல் நாளே சண்டைகள் ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் கிச்சன் டீமில் இருக்கும்  தனலக்ஷ்மிக்குகும“ ஷிவினுக்கும் இடையில் பெரிய மோதல் ஏற்பட்டது.இதனிடையே இந்த வார கேப்டன்சி டாஸ்கில் மைனா ஜெயித்துள்ளார். 


இந்நிலையில் விக்ரமன் மற்றும் ஷிவின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்ரமனும் சரி, ஷிவினும் சரி இருவருமே தாங்கள் சொல்லக்கூடிய கருத்தை மிகவும் வலுவாகவும் விபரமாகவும் சொல்லக்கூடியவர்கள். சில சமயம் இவர்களின் விளக்கமான கருத்துக்களே இவர்களுக்குள் வாக்குவாதத்தை அதிகப்படுத்தும். அந்த வகையில் விக்ரமன் சொன்ன ஒரு கருத்து குறித்து ஷிவின் விளக்கம் கேட்க, விக்ரமன் கொதித்திருக்கிறார்.

அதன்படி, கடந்த காலங்களில் ஷிவின் தேவையில்லாத வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருப்பதாக விக்ரமன் சொன்ன கருத்துக்கு நியாயம் கேட்ட ஷிவின், “அப்படி நான் என்ன பேசினேன்? என்ன நடந்தது என்று விளக்கிச் சொல்லுங்கள்.

உங்களுக்கு எதுவும் விளக்கம் சொல்வதற்கில்லை என்றால் எப்படி என்னுடைய பெயரை நீங்கள் எப்படி குறிப்பிட முடியும்? உங்களால் விளக்கமும் சொல்ல முடியவில்லையே?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


அதற்கு விக்ரமன், ஷிவினிடம்,“ஏங்க இவ்வளவு டீடெயிலாக ஒரு விஷயத்திற்குள் போகிறீர்கள்? நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரிகிறது .. அது நடக்காது” என்று ஆவேசமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





































Advertisement

Advertisement