• Jul 25 2025

அடுத்த 3 வருடத்திற்கு இதை கண்டிப்பாக பண்ணவே மாட்டேன்- மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் முடிவெடுத்த உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக நடித்து இருக்கிறேன். நீங்கள் எப்படி இந்த படத்திற்காக காத்திருக்கிறீர்களோ அதே போல நானும் இந்த படத்தை திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன்.

கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால்,அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தால், சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல வேலைகளுக்கு இடையே தான் இந்த படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.


எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். என் கடைசி படமும் நல்ல படமாக அமைந்தது திருப்தி. நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம், ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு தனி அர்த்தம் உண்டு. மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார்.


அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன் என்று மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி பேசினார். இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், விஜய் ஆண்டனி, கீர்த்தி சுரேஷ்,பா ரஞ்சித், வடிவேலு, மாரிசெல்வராஜ்,ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

Advertisement