• Jul 25 2025

நம்மள வாழ விடமாட்டாங்க... போட்டு ஒரு வழி பண்ணுவாங்க... பீல் பண்ணும் சம்யுக்தா.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். பிரிவிற்காக இவர்கள் இருவரும் மாறி மாறிக் கூறி வரும் காரணங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த பிரிவிற்கு முக்கிய காரணம் சம்யுக்தாவுடன் இணைந்து 'நிறைமாத நிலவே சீரியலில் நடித்த ரவி தான் என்றும் ஒரு தகவல் வெளியானது.


இந்நிலையில் சம்யுக்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் டயலொக் ஒன்றினையும் பதிவு செய்திருக்கின்றார். அதாவது "உங்களை சுத்தி வருகின்ற எதிர்மறைக் கருத்துக்கள் எதையும் செவிமடுக்காது உங்க வேலையை மட்டும் பார்த்திட்டுப் போங்க, தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம் நாம ரியாக்ட் பண்ணிட்டு இருக்க வேணாம் நண்பா, அதே நேரத்தில் அவ்வளவு ஈசியாக எல்லாம் இந்த உலகத்தில் நம்மள வாழ விட மாட்டாங்க, போட்டு ஒரு வழி பண்ணுவாங்க, அதெல்லாம் தாண்டித் தான் நாம் வரணும், கொஞ்சப் பேருக்காவது நம்மள பிடிக்காமல் இருந்தால் தான் லைப் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சம்யுக்தாவிற்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement