• Jul 25 2025

என் கல்யாணத்துக்கு நான் இங்கதான் புடவை எடுப்பேன்.. உறுதியாக கூறிய குயின்ஷி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒன்றான பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய ஒருவர் தான் குயின்ஷி.


கடந்த சில வாரங்களுக்கு முதல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் சமீபத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்காக தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்திருந்தார்.


இவர் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்றொரு வீடியோ குறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அதில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் உள்ள கலெக்சன்களை பார்த்து வியந்துள்ள இவர் விலையை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.


அதாவது இதுவரைக்கும் எங்கேயும் பார்க்காத இவ்வளவு கலெக்ஷன்களை இங்க தான் பார்க்கிறேன், இவங்க ஆள் ரவுண்டர் போல எல்லாமே இருக்கு. கண்டிப்பா என் கல்யாணத்துக்கு இங்க தான் புடவை வாங்குவேன் என அந்தக் கடாயில் வைத்து உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement