• Jul 24 2025

திருமணத்திற்கு பிறகும் அழகில் கொஞ்சம் கூட மங்காமல் ஜொலிக்கும் மகாலக்ஷ்மி- வாஃவ் என்னவொரு போஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் விஜேவாக தனது கெரியரை ஆரம்பித்து தற்பொழுது சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மகாலக்ஷ்மி. இவர் முதலில் அனில் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலக்ஷ்மி கணவரைப் பிரிந்ததோடு சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ,ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


 இதையடுத்து சினிமா சின்னத்திரை என இருந்து வந்த மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் ரவீந்தரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விவாகரத்தான இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பிறகும் இருவரும் ஓடி ஓடி உழைத்து வருகின்றனர். மகாலட்சுமி சீரியல்களில் நடிப்பதை காட்டிலும் சமூக வலைதளங்கள் மூலம் பெரிதாய் கல்லாக்காட்டி வருகிறார். திண் பண்டங்கள், சேலைகள், அழகு சாதனப் பொருட்கள், ஆபாரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என கிடைப்பதையெல்லாம் என தனது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரப்படுத்தி வருகிறார்.


அந்த வகையில் தற்போது கறுப்பு நிற  வேலைபாடுகளுடன் கூடிய சேலையில் கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார். அத்தோடு நெற்றியில் குங்குமம் வைத்துள்ள மகாலட்சுமி முதல் முறையாக தனது தாலியை வெளியில் தெரியும் படி சேலைக்கு மேல் போட்டும் போஸ் கொடுத்துள்ளார். மகாலட்சுமியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாஃவ் என வாயை பிளந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement