• Jul 25 2025

'ஒன்பது ரூபாய் நோட்டு' என்னால் மறக்கவே முடியாது... சத்யராஜ் நெகிழ்ச்சி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர்.

அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார். இவர் நடிப்பில் உருவாகும் அனைத்துப் படங்களுமோ ரசிகர்கள் மனதில் எளிதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றன.


அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'ஒன்பது ரூபாய் நோட்டு'. தங்கர் பச்சான் இயக்கிய இப்படமானது வெளியாகி 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றது. இதனையொட்டி அதில் நடித்துள்ள சத்யராஜ் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான் நெகிழ்ச்சியோடு பேசி இருக்கின்றனர். 

அதில் சத்யராஜ் பேசும்போது ''ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது இதுதான். அதில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து இருந்தேன் என்றார்.

எனது கதாபாத்திரத்தில் நான் நடிக்காமல் வாழ வைத்தது அந்த படத்தின் டைரக்டர் தங்கர் பச்சான். அவர் சிறந்த சிந்தனையாளர். படைப்பாளி. அவருக்குள் வாழ்ந்த அந்த கதாபாத்திரத்தை என் மூலம் வாழவைத்தார். போலித்தனம் இல்லாத படைப்பு. இந்த அற்புதமான படத்தில் நான் நடித்தது பாக்கியம்" என நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்.


மேலும் தங்கர் பச்சான் கூறுகையில் ''2007-ம் ஆண்டில் 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்கு தேவையானவைகளைத்தானே தகவமைத்துக்கொள்ளும் என்பதை பலமுறை பட்டறிந்திருக்கிறேன்.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்த பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement