• Jul 24 2025

இனி விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க மாட்டேன்: இயக்குநர் சீனு ராமசாமி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்த மாமனிதன் படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தை ரஷ்யாவில் நடக்கவிருக்கும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப் போகிறார்கள்.

ஏப்ரல் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கவிருக்கிறது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா. இவ்வாறுஇருக்கையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ரஷ்யன் மையத்தில் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, ராஜேஷ், அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இவ் நிகழ்ச்சியில் பேசிய சீனு ராமசாமி சொன்ன விஷயம் தான் விஜய் சேதுபதி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

சீனு ராமசாமி தெரிவித்ததாவது, 37 நாட்களில் எடுக்கப்பட்ட படம் மாமனிதன். கமல் ஹாசனின் பாட்டு ஒன்று இருக்கு. உப்பு விக்கப் போனேன் மழை பெய்தது. உமி விக்கப் போனேன், காத்து அடுச்சுச்சு. இந்த படத்துக்கும், அந்த பாட்டுக்கும் தொடர்பு இருக்கு. படம் ரிலீஸான நேரம் சரியில்லை. அப்படி ஒரு நேரத்தில் இந்த படம் வந்துவிட்டது. ஒரு 20 சதவீத ரசிகர்களோட திரையரங்கை விட்டுப் போச்சு.

நீங்க தான் எட்டு படம் எடுத்திட்டீங்க. மேலும் இது நல்ல படம். நாளைக்கு டிவியில் போடுவாங்க என என்னிடம் சொன்னாங்க. ஒரு தாய் எட்டுப்புள்ள பெத்துட்டா ஒரு புள்ளைய சாவ விடுவாளா?. அதுவும் உயிருடன் இருக்கிற புள்ளைய. இங்கு இருக்கும் நாட்டு வைத்தியங்க பூரா குனிந்து பார்த்து இந்து எந்திரிக்காதுனுட்டாங்க. அப்புறம் பார்த்தால் ஒலிம்பிக்கில் ஓடிக்கிட்டிருக்கு. உலக நாடுகளில் இந்த படம் 650 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள், ஸ்டாலின் ஐயா ஆண்டு வரும் இந்த காலகட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆண்ட நாட்டிற்கு செல்வதில் ரொம்ப சந்தோஷம். அத்தோடு வாழ்வியலை பேசும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்த விஜய் சேதுபதிக்கும், இதை தயாரித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கும், இதற்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், பாஸ்கரன் அவர்களுக்கும் என் நன்றி.

விஜய் சேதுபதி ஒரு உலக நடிகன். விழிப்புணர்ச்சி விஜய் சேதுபதிக்கு இருந்தால், வாழ்வை பற்றிய தெளிவு இருந்தால் அவர் போக வேண்டிய இடம் வேற. இன்னும் மேல போலாம். இப்போ இந்தி வரைக்கும் போயிருக்கிறார். இனி ஒரு ரஷ்ய படத்தில் நடிக்கலாம், ஒரு அமெரிக்க படத்தில் நடிக்கலாம், ஒரு ஆஸ்திரேலிய படத்தில் நடிக்கலாம். அத்தோடு தமிழர்களின் பெருமை விஜய் சேதுபதியால் உலகம் முழுவதும் தெரிய வேண்டும்.

ஆஹா ஓடிடி மூலம் மாமனிதன் படம் ரூ. 51 கோடி வசூலித்துள்ளது. பொது ஊடகத்தால் வெற்றி வெற முடியாத படம் ஓடிடியில் வென்றிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது. 12 ஆண்டுகளில் 4 படங்களை விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருக்கிறேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் எல்லாம் பேசும் என்றார்.

Advertisement

Advertisement