• Jul 23 2025

விஜயா ரகசியமாக மனோஜ்ஜை பார்க்க வருவதை அறிந்த மீனா- மாமனாரிடம் சொல்வாரா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் இரவு நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருகம் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் மனோஜ் ஏமாற்றி விட்டதால் முத்துவை மீனா திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் முத்துவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க மனோஜ் இருக்கும் இடம் தெரிந்ததால் அடிக்கடி முத்துவின் அஅம்மா அவருக்கு ரகசியமாக சாப்பாடு பணம் என்பவற்றைக் கொண்டு போய் கொடுத்து வருகின்றார். தனது மாமியாரின் நடவடிக்கையில் மீனாவுக்கு சந்தேகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்து வருகின்றார்.

இப்படியான நிலையில் மனோஜ் தங்கியிருக்கும் லாச்சிற்கு பூக் கொடுக்கப்போன மீனா தனது மாமியார் மனோஜ்ஜிற்கு உணவு கொண்டு வந்து கொடுப்பதை பார்த்து விட்டார். அத்தோடு மனோஜ் பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஓடிப் போன விஷயமும் தெரிந்து விட்டது.இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

இதனால் மீனா இந்த ரகசியத்தை தனது மாமனாரிடமோ அல்லது முத்துவிடமோ சொல்லாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement