• Jul 25 2025

எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வெச்சி மேய்க்குறது?- இப்பிடியொரு புருஷன் வந்தால் நல்லா இருக்கும்- வெளிப்படையாக சொன்ன ஷிவாங்கி

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலும் கோமாளியாக கலந்து கொண்டு பிரபல்யமான இவர் 4 வது சீசனில் குக்காக கலநது கொண்டு அசத்தி வருகின்றார்.

கடந்த சில வாரங்களாக ஷிவாங்கி பல இடங்களில் சொதப்பினாலும் எலிமினேஷனில் இருந்து தப்பி தொடர்ந்து போட்டியில் இருந்து வருகிறார்.இந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெறும் என்பதால் போட்டி சற்று கடினமாக மாறி இருக்கிறது. 


இன்றைய குக் வித் கோமாளி எபிசோடில் ஐஸ் கோலா செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை செய்ய முடியாமல் திணறினார் ஷிவாங்கி.ஐஸ் கோலா டாஸ்க் செய்துகொண்டிருக்கும் போது ஷிவாங்கி திருமணம் மற்றும் குழந்தை பற்றி பேசி இருக்கிறார்.


இன்னும் 5 வருடங்களில் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என மோனிஷா சொல்ல, 'எனக்கும் அதே ஆசை தான். எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வெச்சி மேய்க்குறது?' என கூறினார் ஷிவாங்கி."எனக்கு வரும் புருஷன் calm ஆக ஒழுங்காக இருக்கும் நபராக இருந்தால் நல்லா இருக்கும்" எனவும்  கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement