• Jul 24 2025

அந்த படத்தை பார்த்தால் கனவு உலகிற்கு சென்றுவிடுவேன் _நடிகை சமந்தா .தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அழகாலும் , நடிப்பாலும் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்தான் நடிகை சமந்தா. இவருக்கு ஏற்பட்ட  மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு  சிகிச்சை எடுப்பதற்காகவும், ஓய்வு எடுக்கவும் சினிமாவில் இருந்து ஆறு மாதங்கள் பிரேக் எடுத்திருக்கிறார்.தகவல்கள் வெளியாகியிருந்தது.


இந்நிலையில் இவர் சிகிச்சைக்காக அம்மாவுடன் அமெரிக்கா சென்றார். இந்நிலையில்  ஆஸ்திரியாவுக்கும்  சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களளை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில் சிறு பிள்ளையாக இருந்தபோது  சந்தோஷமாக இருந்தாலும் சரி,  சோகமாக இருந்தாலும் சரி நான்  பார்க்கும் படம் The Sound of Music. அந்த படத்தை பார்த்தால் கனவு உலகிற்கு சென்று விடுவேன். இப்பொழுதும் அந்தபடத்தை நான் பார்க்கின்றேன்.The Sound of Music படத்தை எப்பொழுது பார்த்தாலும் அப்படியே தான் இருக்கிறது, நம்மை குழந்தை பருவத்திற்கு அப்படியே  அழைத்துச் செல்கிறது. தான் அந்த  படம் எடுக்கப்பட்ட இடத்திற்கு வந்திருப்பது ஸ்பெஷல் என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement