• Jul 23 2025

வெளியானது தளபதி 68 திரைப்படத்தின் புதிய அப்டேட்..... இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஜய்....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா  இசையமைப்பில்  நம்ம இளைய தளபதி நடிப்பில் வெளியாக இருக்கும்  படம் தான் தளபதி 68.


 இப்படத்தின் அப்டேட்கள் சில ஏற்கனவே கிடைத்திருந்தது. மேலும் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இப்போது இப்படத்தின் இன்னும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.


முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் , 'தளபதி 68' படத்தில் மூத்த விஜய்க்கு ஜோடியாக சிம்ரனும் நடிக்கின்றனர். 


நம்ம இளைய தளபதி அண்மையில் நடித்த பீஸ்ட் படம் தோல்விலையே முடிந்தது. வாரிசு படம்  ஓரளவு   விமர்சம் பெற்றதனைத் தொடர்ந்து தற்பொழுது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய் இப்படம் வெற்றிபெறும் என்றே ரசிகர்கள் நம்புகின்றார்கள். மேலும் இத்திரைப்படம் எதிர் வரும் ஒக்டொபர் 19-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.


அந்த தகவலோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராக இருக்கும் தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பு ஒக்டொபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று திரைபடக்குழுவினால் தகவல் வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement