• Jul 26 2025

கமல்ஹாசன் என்றால் வேண்டவே வேண்டாம்- ஓட்டம் பிடிக்கும் இயக்குநர் பாலா- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் தான் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு சமூகம் சார்ந்த கருத்துக்களையும் இவர் தனது படங்களில் தெரிவிப்பார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது நடிகர் சூர்யாவை வைதத வணங்கான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருவதாகவும் அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


மேலும் இவர் வேலா ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை படமாக முடிவெடுத்து அதற்கான முயற்சிகள் செய்தார்.

அதில் கமல் ஹாசனை நடிக்க வைக்க ஆரம்பத்தில் முடிவெடுத்து அதற்காக கதை சொல்ல வேலா ராமமூர்த்தியை அனுப்பி இருக்கிறார்.

கமல்ஹாசனும் கதையை கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால் அதற்கு பிறகு பாலா தரப்பு தாமதம் ஆக்கி கொண்டே இருந்து அதன் பின் வேறு ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டாராம்.

கமலை வைத்து படம் எடுத்தால் அவர் எல்லா விஷயங்களிலும் தலையிடுவார் என்பதால் தான் அவருடன் கூட்டணி சேர வேண்டாம் என  பாலா முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
















Advertisement

Advertisement