• Jul 25 2025

ரச்சிதா பின் சுற்றியதால் ராபர்ட் மாஸ்டரை பிரேக் அப் செய்த காதலி- பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அதிர்ச்சிப் பொருள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 40 நாட்களைக் கடந்துள்ளது. பரபரப்பான சண்டை, சச்சரவுகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் அரண்மழன அன்னும் டாஸ்க் நடைபெற்றது.

இதில் அசீம் நடந்து கொண்ட விதம் ஹவுஸ்மேட்ஸ்களை மாத்திரம் அல்லாது பார்வையாளர்களையும் அதிச்சிக்குள்ளாக்கியது. உங்களின் குணம் தான் உங்களின் தரத்தை காட்டும் என அசீமை பார்த்து காட்டமாக பேசிய ப்ரோமோ கூட வெளியாகியிருந்தது.


இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நாளில் இருந்து  ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை காதலிப்பதாக கூறி வருகின்றார்.இதனால்   அரண்மனை டாஸ்கில் சற்று அத்துமீறி நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது. ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் எப்படி பழகுகிறார் என்பதை அறிந்து கொண்ட, ரக்ஷிதா அவரிடம் இருந்து விலகி விலகி போனதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இவர் செய்த அட்ராசிட்டியை வெளியில் இருந்து, பார்த்து வந்த அவரது காதலி தற்போது காண்டாகி... ராபர்ட் மாஸ்டர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை, அவருக்கு பொருட்கள் அனுப்பும் போது அந்த பெட்டியில் போட்டு அனுப்பி, பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். 


இந்த மோதிரத்தை பார்த்து செம்ம ஷாக்கான ராபர்ட் மாஸ்டர் இது குறித்து குயின்சியிடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement