• Jul 23 2025

இந்த நடிகர் இல்லாவிட்டால்... விஜய்யால் அரசியலில் ஜெயிக்க முடியாது... பிரபல ஜோதிடர் கூறிய பகீர் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார். இப்படத்தைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது அவர் அரசியலில் இணையப் போவதால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறியிருந்தார்.


இவ்வாறான விஜய்யின் திடீர் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னமும் விஜய் அறிவிக்காத நிலையிலும், நெருங்கிய வட்டாரங்கள் கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் என்பவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் அதேசமயத்தில் சுக்கிரன் தோசம் முடியும் வரை சினிமாவில் தான் இருப்பார், சினிமாவை விட்டு விலகமாட்டார்" என்றார்.


அதுமட்டுமல்லாது "அரசியல் திட்டவேலைகளையும் தீவிரமாக செய்வார், ஆனால் சினிமாவை விட்டு வெளியில் வரமாட்டார். விஜயகாந்திற்கு விருட்ச லக்னம் இருப்பதால் சந்திர மங்கள் யோகம் இல்லை, விஜயகாந்துக்கு சந்திரன் - செவ்வாய் சேர்ந்திருக்கும். எனவே விஜய் அவரே சொந்தமாக கட்சி ஆரம்பித்து தனியாக நின்று ஜெயிக்கமுடியாது. 

அதையும் மீறி நின்னால் வேறு யாராவது அவருக்கு எதிராக நின்று தோற்கடிப்பார்கள். ஆகவே விஜய் - விஜயகாந்துடன் இணைந்து தான் அரசியலில் செயல்படுவார் எனவும் குறித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement